எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பனங்கிழங்கு!

05 March 2021

பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய நுங்கு, பதநீர், கிழங்கு மற்றும் பழம் போன்றவை அதிக சுவையுடன் மனிதர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் செயல்படக்கூடியது.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு அதனை வெட்டாமல் மரத்திலேயே விட்டுவிட்டால் அந்த நுங்கு நன்றாக பழுத்து பனம்பழமாகி விடும். இந்த பனம் பழத்தினை எடுத்து வெட்டி நிலத்தில் குழி தோண்டி அதில் புதைத்து வளர்த்து வந்தால் கிடைப்பதுதான் பனங்கிழங்கு.
உடலுக்கு எதிர்ப்புச்சக்தியாகவும் செயல்பட்டு உடலைக் காக்கும் என்கின்றன சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகள்.


பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
*நார்ச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்னைகள் குணமாகும்
.*உடல் இளைத்தவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும்.
*உடலுக்கு குளிர்ச்சித்தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கும்.
*பனங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, வெயிலில் காய வைத்து, பின் அதை அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து அதிகமாகும்.
*பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள்வலிமையாகும்.
*சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்னை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
*பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.