பெண்னை தாக்கிகொலை மிரட்டல் விடுத்த நிருபர்மீது தேனியில் வழக்கு..

11 June 2021


தேனி என்.ஆர்.டி நகரில் ராயல்பியூட்டி பார்லர் என்ற பெயரில் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர் நடந்து வந்துள்ளது அந்த மசாஜ் சென்டரை தேனி மாவட்டத்தை சேர்ந்த நிருபர் ராஜாமுகமது என்பவரும். பிரதீபா என்பவரும் நடத்தி வந்த மசாஜ் சென்டரில் பெரியகுளத்தை சேர்ந்த மாலதிபிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் பலமாதங்களுக்கு பணியாற்றி உள்ளார். அப்போ அங்குமசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதால் அங்கு பணியாற்ற விருப்பம் இல்லாமல் அங்கிருந்து வெளியேறி உள்ளார். அங்கு நடக்கும் சட்டவிரோத செயல்களை வெளியே சொல்லி விடுவார் என நிருபர் ராஜாமுகமதுவும்.பிரதிபாவும் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமாக மிரட்டல் விடுத்து வந்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து சம்பவ நாளான அன்று பெரியகுளத்தில் இருந்து பின் தொடர்ந்து வந்து தேனி புதுபஸ் நிலையம் அருகில் உள்ள சிவாஜிநகர் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் முன்பு பணியாற்றிய பெண்ணை வழிமறித்து பெண் என்றும் பாராமல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.. இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட பெண் தேனி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு 799 /2021 ன் படி 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டனர்.. மேலும் தனது உயிருக்கு நிருபர் ராஜாமுகமது மற்றும் பிரதிபா ஆகியோரால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் தொடர்ந்து வாட்ஸ்அப் யூடியூப்போன்ற சமூக வலைத்தளங்களில் அவதூறுபரப்பி வருவதாகவும் தேனிமாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் சென்று புகார் மனுவும் அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது