பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

04 April 2021

பிரபல பாலிவுட் திரை நட்சத்திரம் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது டுவிட்டரில் இந்த தகவலை தெரிவித்துள்ள  அக்‌ஷய் குமார், " இன்று காலை எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா விதிகளை பின்பற்றி உடனடியாக நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். தற்போது வீட்டுத்தனிமையில் இருக்கும் நான் உரிய மருத்துவ உதவிகளை நாடியுள்ளேன். சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.