பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி - பேட்டிங் தேர்வு

03 October 2020

பெங்களூருஅணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.அபுதாபியில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ராஜஸ்தான் அணி 10 போட்டிகளிலும், பெங்களூரு அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.