ஆடித் பெருந்திருவிழாவையொட்டி, சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்

21 July 2021

*ஆடித் பெருந்திருவிழாவையொட்டி, சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்...*

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் ஸ்ரீகள்ளழகர் திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆடிப் பெருந்திருவிழா என்று அழைக்கக்கூடிய ஆடிப் பிரமோட்சவம்...

10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவிற்காக,  கடந்த வெள்ளிக்கிழமை 16ம் தேதி திருக்கோவில் முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கருடக்கொடி ஏற்றப்பட்டு திருவிழா தொடங்கியதையடுத்து, திருக்கோயில் உட்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் உற்சவரான சுந்தராஜபெருமாள் என்று அழைக்கக்கூடிய கள்ளழகர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியருக்கு தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது, இதனைத் தொடர்ந்து  அன்னவாகனம், தங்கப்பல்லக்கு, சிம்மவாகனம், அனுமார்வாகனம், கருடவாகனம், என தினசரி பல்வேறு வாகனங்களில் கள்ளழகர் எழுந்தருளப்பட்டு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில் 5ம் நாள் நிகழ்ச்சியாக காலை கள்ளழகருக்கு திருமஞ்சனமும் நடைபெற்றதைத் தொடர்ந்து, சேஷவாகனத்தில் எழுந்தருளப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது, 

கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக, இந்த ஆண்டும் ஆடித் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, திருக்கோயில் உட்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தாண்டும் திருத்தேரோட்டம் ரத்துச் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது ...