உளுந்தூர்பேட்டையில் 11-ஆம் ஆண்டு சங்கீத மும்மூர்த்திகள் இசை விழா நடைபெற்றது...

12 January 2023

உளுந்தூர்பேட்டையில்
11-ஆம் ஆண்டு சங்கீத மும்மூர்த்திகள் இசை விழா நடைபெற்றது... 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு மருத்துவ சமுதாய அகத்தியர் நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் பேரவை சார்பில் 
அகத்தியர் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் அறக்கட்டளை துவக்க விழாவும் 11ஆம் ஆண்டு சங்கீத மும்மூர்த்திகள் இசை விழாவும் உளுந்தூர்பேட்டை நகராட்சி மணிக்கூண்டு திடலில் ஸ்ரீ சாரதா ஆசிரம நிர்வாகி யதீஸ்வரி ஆத்ம விகாச பிரிய அம்பா தலைமையில் நடைபெற்றது,  

நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ மணிக்கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 
இரா.குமரகுரு, நகர மன்ற தலைவர் 
கே.திருநாவுக்கரசு, 
நகர மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன், நல்லாசிரியர் 
சீராள.சிவப்பிரகாசம், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் 
க.ஜெய்சங்கர் மருத்துவ சமுதாய மாநிலத் தலைவர் பழனி, பாஜக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருள், ஆகியோர் கலந்து கொண்டனர்,
இசை விழாவில் நெல்லிக்குப்பம் ராஜா, சிதம்பரம் ப்ளூட் வாசுதேவன், பெரிய பட்டு வில்லிசை வேந்தர் மனோஜ், உளுந்தூர்பேட்டை தவில் இசைக் கலைஞர் சிவசங்கர், 
இசை செம்மல் தபேலா பிரபு, வில்லியனூர் ரிதம்பேடு புஷ்ப கணபதி குழுவினரின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தவில், நாதஸ்வர இசைக் கலைஞர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்..

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் / சப்எடிட்டர்