ஹிட்டடிக்கும் அஷ்வினின் "லோனர்"

29 May 2021

குக்கு வித் கோமாளி " புகழ் அஷ்வினின் நடிப்பில் தனிமையை மையப்படுத்தி "லோனர்" என்ற பாடல் இன்று யூடியூபில் வெளியாகியுள்ளது. 

 
இப்பாடலை இசையமைத்து இயக்கியுள்ளார் எடி கிரிஸ். விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கம் பிரேம் கிருஷ்ணா மேற்கொண்டுள்ளார். கிஷான் எடிட்டிங்கை கையாண்டுள்ளார். 
 
இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.