கலைத் திருவிழாவில் வெற்றிபெற்ற செங்குறிச்சி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா...

02 December 2022

கலைத் திருவிழாவில் வெற்றிபெற்ற செங்குறிச்சி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா... 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டார அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கலை திருவிழாவில் செங்குறிச்சி காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மாணவ மாணவிகள் இயற்கை காட்சி வரைதல், செதுக்கு சிற்பம், வில்லுப்பாட்டு, செவ்வியில் நடனம், பிறவகை தனி நடனம், மேற்கத்திய நடனம், கும்மி நடனம், கிராமிய நடனம், செவ்வியல் குழு நடனம், குழு நடனம், நாடகம், கதை எழுதுதல், பேச்சு போட்டி ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த
மாணவ மாணவியர்களை
பாராட்டும் வகையில்  செங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் நடத்துனருமான 
பசுமை நாயகன் 
க.குணசேகரன் அவர்களின் ஏற்பாட்டில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் அவர்கள் தலைமையில் பரிசுப் பொருட்கள், சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திருநாவலூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி இளங்கோவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன்,
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கனிமொழி, பள்ளியின் தலைமை ஆசிரியை நல்லாசிரியர் அபிராமி, கல்வி மேலாண்மை குழு தலைவர் உஷாராணி,  மேலாண்மை குழு உறுப்பினர்கள்,  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஞானபிரகாசம், சரோஜா, முத்தழகி தனபால் மற்றும் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்...

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் / சப்எடிட்டர்