எம்.ஆர்.விஜயபாஸ்கர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோசனை

22 July 2021

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்
எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 


வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கரூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் இரண்டு மணி நேரமாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.