Dr அனீமியா என்னும் இரத்தச்சோகை என்றால் என்ன ?

26 March 2021


✔️Hemoglobin – ஹீமோகுளோபின்
இரத்தத்தின் பிரதான கூறு - (RBC) செங்குருதியணுக்கள் இந்த செந்நிறத்துக்கு காரணமானது ஹீமோக்குளோபின் இது இரும்பு மற்றும் குளோபுலின் எனும் புரதத்துடனிணைந்த உருவாக்கப்படுவது. ஹீமோக்குளோபுளின் பணி– நுரையீரலிலிருந்து நுரையீரலுக்கு கரியமிலவாயுவையும் கடத்திச் செல்வது.

இரத்தச்சோகை என்றால் என்ன?

கருதியில் மேற்கூடிய ஹீமோக்குளோபின் குறைவாக இருக்கும்போது ஆக்சிஜென்,தேவையான அளவு உடலிலுள்ள செல்களுக்கு எடுத்துச் செல்லமுடியாது. இதைத்தான் இரத்தச்சோகை என்கிறோம். இரத்தச்சோகை குருதியிலுள்ள ஹீமோக்குளோபினின் அளவை பொறுத்து கணிப்பிடப்படுகிறது.




‼️அறிகுறிகள்‼️

1.மூச்சுவாங்குதல்
2.இதயத்துடிப்பு அதிகரித்தல்
3.நெஞ்சப்படபடப்பு
4.அடிக்கடி தலைவலி/ மயக்கம்
5.நகம், சருமம், வாயின் உட்பகுதி, கண்கீழ்மடல் முதலியன வெளிறிப்போதல்
6.கரி, chalk, களிமண் போன்ற உண்ணத்தகாத பொருள்களை உண்ணுதல்
7.கவனக்குறைவு
8.மஞ்சள் காமாலை நோய்
9.எலும்பு அமைப்புகளில் மாற்றம்
10.கால்களில் அழற்சிப் புண்

-🔺பலரில் எவ்விதநோயறிகுறியின்றியும்/ வரையறுக்கப்படாத பொறுவான குறிகளிலிருந்து இந்த நோய் கண்டுபிடிக்கப்படாமல் போகும் சாத்தியக்கூறு உண்டென்பது குறிப்பிடத்தக்கது.!!!🔻

அடிப்படை வகைப்படுத்தல்

1. குருதிப்பெருக்கினால் ஏற்படும் அதிகப்படியான இரத்த இழப்பு
2. அதிகப்படியான குருதிச் சிவப்பணுக்களின் அழிவு – Hemolysis
3.குறைந்த அளவிலான சிவப்பணுக்களின் உற்பத்தி.

⚫️ஏற்படுவதற்கான காரணிகள்⚫️

1. கர்ப்பகாலம் (<11.Hb இரத்தச்சோகை)

2. கடுமையான மாதவிடாய் /இரத்தப்போக்கு

3. ஒட்டுண்ணித்தொற்று (வயிற்றில் புழு இருத்தல்)

4. ஊட்டச்சத்து குறைபாடு

5. மகப்பேறின்போது அதிக குருதி விரயம்

சிகிச்சை
பொதுவாக அடிப்படைக்காரணத்தைப் பொறுத்தும் தீவிரதன்மையைப் பொறுத்தும் ,தீவித் தன்மையை பொறுத்தும், மாறுபடும்.

🟡1.வைத்தியரின் வழிகாட்டலின் கீழ் இரும்புச் சத்து Vit B12, மற்றும் போலிக்கமில மாத்திரைகளை உண்ணுதல்

🟡2. சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணுதல்

🟡3. சிறார்களுக்கு கிரமமாக பூச்சி மருந்தளித்தல்

🟡4. கர்ப்பினியாயின் இரும்புச்சத்து, போலிக்கமில மாத்திரைகளை உண்ணுதல் 

🟡5. சிலவேளைகளில் ஊசி மூலம் இரும்புச் சத்து மருந்து ஏற்றப்படலாம்.

மேற்கூறியவை பெரும்பாலும் மிதமான அளவு/ இலேசான அளவிலுள்ள இரத்தச்சோகைக்குரியது.

🟡6.கடுமையான இரத்தச்சோகையாயின் வைத்தியசாலை அனுமதியுடன் 
செயற்கை ஆக்சிஜென், இரத்தம் ஏற்றல் முதலியன தேவைப்படலாம்.

🟡7.aplastic anemia போன்ற நிலைமையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை செய்ய நேரிடலாம்.

🟡8.சிறுநீரக நோயாளிகளுக்கு எஜித்திரோபொயட்டின் சிகிச்சை அளிக்கப்படலாம்.

🟡9.வாழ்க்கைமுறை மாற்றியமைப்பு என்பது இங்கு சிகிச்சையுடன் கடைப்பிடிக்க வேண்டியது. (உணவு உண்ணும்போது தேநீர் பருகுவதை தவிர்த்தல், புகைப்பிடிப்பதை கைவிடல், ஊட்டமான உணவாகாரம்)

இரும்புச்சத்து நிறைந்த உணவு :
தாங்கள் மாமிசம் உண்ணாதவராயின் 

🔻1.கீரை வகைகளில் 100 கிராமிற்கு 3mg வரை இரும்புச்சத்து உண்டு.அதிலும் முருங்கைக்கீரையில் 4mgவரை இருக்கிறது. அதை சூப் வைத்து குடியுங்கள். 

கீரைகளை ஒரு நாளைக்கு 300 கிராம் வரை எடுக்கலாம் இது ஒரு நாளைய தேவையில் 50-60% ஆக அமையும்.

🔻2.100g நிலக்கடலையில் 4.5mgவரை இரும்புச்சத்து உள்ளது. ஒரு நாளைய தேவையில் 25% வரை கிடைத்து விடும். 

🔻3.பாதாம் பருப்பிலும் கிட்டத்தட்ட 5mg இரும்புச்சத்து இருக்கிறது.

🔻4.பீன்ஸ் வகைகளில் 100gல் -5mg வரை இரும்புச்சத்து உண்டு. அதிலும் சுண்டக்காய் இல் 100gல் 22mgஇரும்புச்சத்து உள்ளது.

நீங்கள் மாமிசம் உண்பவராயின் 

⚫️1.நான்கு கால் விலங்குகள் எதுவானாலும் அதில் உங்கள் விருப்ப விலங்கின் கல்லீரல் 100 கிராம் சாப்பிட்டால் அதில் உங்களுக்கு 18 மில்லிகிராம் இரும்புச்சத்து கிடைக்கும். இது ஒரு நாளைய தேவையில் 100%ஐ பூர்த்தி செய்யும்.

⚫️2.மீன் வகைகளிலும் இரும்புச்சத்து உண்டு.

⚫️3.பாலில் இரும்புச்சத்து மிக மிக குறைவு

⚫️4.100g முட்டையில் 1mg இரும்புச் சத்து இருக்கிறது.


by dr Priyaanthini Kamalasingam