இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா

21 November 2020

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் பங்கேற்கும் அமித்ஷா காணொளி மூலம் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதேசமயம் தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் சூழலில் பாஜக நிர்வாகிகளை சந்தித்தும் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

மத்தியில் ஆளும் பாஜக பல மாநிலங்களில் தங்களது செல்வாக்கை நிரூபித்தாலும் கூட தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேணடும் என்ற பாஜகவின் கனவு வெறும் கானல் நீராகவே உள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் நாங்களும் வளர்ந்து வரும் கட்சி தான் என்பதை நிரூபிக்க படாதபாடுப்படுகிறது. அதன் ஒரு முயற்சி தான் வேல் யாத்திரை. வேல் யாத்திரைக்கு அரசு மறுப்பு தெரிவித்த நிலையிலும் கூட, தொடர்ந்து தடையை மீறி வேல் யாத்திரையை நடத்தி வருகிறது.

ஒருபுறம் பாஜக – அதிமுகவின் கூட்டணி, நெருங்கும் சட்டமன்ற தேர்தல் என தமிழக தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும் சூழலில், அமித்ஷாவிந வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.