உளுந்தூர்பேட்டை அருகே மது மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி...

17 January 2023

உளுந்தூர்பேட்டை அருகே  மது மற்றும்   போதை ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி... 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள பாண்டுர் கிராமத்தில் டாக்டர் அப்துல் கலாம் இலவச பயிற்சி மையம் சார்பில்
பொங்கல் திருநாளை முன்னிட்டு 
தமிழகத்தில் மது அதிக அளவு விற்பனை செய்யப்படும் நாளான கானும் பொங்கலில் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் இளைஞர்களை மீட்க வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது, 
போட்டியை வேந்தன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.காவியவேந்தன் கொடி அசைத்து துவக்கி வைத்தார், இந்த போட்டியில் 100-க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன்  கலந்து கொண்டு 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை அடைந்தனர் முதல் இடத்தை பிடித்த ராஜாவுக்கு டாக்டர். காவியவேந்தன் முதல் பரிசாக ரூ. 5000 வழங்கினார், 2-வது இடத்தை பிடித்த திருமூர்த்திக்கு ஊ. ம. து. தலைவர் கிருஷ்ணவேணி பாக்கியராஜ் ரூ. 3000 பரிசாக வழங்கினார், 3-வது இடத்தை பிடித்த பாலாஜிக்கு, கான்ராக்டர் ஜீவா ரூ.  2000 பரிசாக வழங்கினார், 4-வது இடத்தை பிடித்த ஆண்டவனுக்கு அக்ரி ராஜேஷ் ரூ. 1000 வழங்கினார், வெற்றி பெற்ற இளைஞர்களை பாராட்டி பரிசு பொருள் வழங்கப்பட்டது.

இந்த போட்டியை காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் ஏற்பாடு செய்திருந்தார்
மது மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் / சப்எடிட்டர்