திருவாரூரில் ஏ.ஐ.டி.யு.சி ஆர்ப்பாட்டம்*

23 September 2021


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்  ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமை வகித்தார்.  ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் காந்தி, சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நேரு, பழ வியாபாரிகள் சங்க தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில்  கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலரை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று தொடர்புடைய பணியில் கடந்த மே, ஜூன் மாதத்திற்கான ஊக்க தொகை உடன் வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் துப்வுரவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம், சிறப்பு தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை  வலியுறுத்தி  முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி.உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
*நிருபர் மீனா திருவாரூர்*