அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி அதிமுக, திமுக, மற்றும் அமமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

15 September 2021

அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி அதிமுக, திமுக, மற்றும் அமமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மதுரை மாவட்டம் மேலூரில், பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளையொட்டி,  மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மதுரை  புறநகர் கிழக்கு மாவட்ட  இளைஞர் இளம்பெண்கள், பாசறை செயலாளரும், மேலூர் சட்டமன்ற உறுப்பினருமான பெரியபுள்ளான் என்ற செல்வம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன் ஆகியோர்  மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். 
 இந்நிகழ்ச்சியில்  மேலூர் தெற்கு  ஒன்றிய கழக செயலாளரும், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் பெரியசாமி, மேலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பொன்ராஜேந்திரன், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குலோத்துங்கன், மேலூர் நகர் கழக செயலாளர் பாஸ்கரன், வல்லாளப்பட்டி பேரூர் கழக செயலாளர் வி.ஆர். மணிகண்டன், திருவாதவூர்  ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன் ஐடிவிங் தலைவர் சிவா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதேபோல் திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் நேருபாண்டியன் தலைமையில் திமுகவினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் அமமுகவினரும் அறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்