தலைமைக்கு தவிக்கிறது அதிமுக!

10 May 2021

அதிமுகவுக்கு தலைமையேற்க வாருங்கள் என சசிகலா ஆதரவு போஸ்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தின் அருகிலேயே ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 
அதிமுகவில் தற்போது இருக்கும் இரட்டை தலைமையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டு வருகின்றனர் என்பதும் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்ய முடியவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் அதிமுகவின் தற்போதைய நிலையில் கட்சியை காப்பாற்ற சசிகலாவால் மட்டுமே முடியும் என்ற ரீதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகிலேயே சசிகலா ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என்றும் அதிமுகவுக்கு தலைமை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் அந்த போஸ்டரில் உள்ள வாசகங்கள் குறிப்பிடப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமை ஏற்க சசிகலா ஒப்புக் கொள்வாரா? அதற்கு ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பு ஏற்றுக்கொள்வார்களா? சசிகலாவை மீண்டும் கட்சியில் ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்திருப்பதை மறுக்க முடியாது. 

கடந்த தினங்க தினங்களுக்கு முன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. ஆனால் அந்தக் கூட்டத்தின் முடிவில் ஓபிஎஸ் - இபிஎஸ் என்ற இரு தரப்பிற்கும் இடையே பெரிய அளவு கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆஇஅதிமுக வின் தோல்விக்கு காரணம் ஈபிஎஸ் தான் என்று ஓபிஎஸ் தரைப்பரப்பு கடுமையான விமர்சனத்தை முன் வைத்தது. மேற்கு மண்டலத்தைத் தவிர மற்ற இடங்களில் அதிமுக விற்கு சற்று பலம் குறைந்ததாகவே நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக தென் தமிழகத்தை பொருத்தவரை ஆகிய அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணங்கள்: 

தென் தமிழகத்தை பொருத்தவரை முக்குலத்தோர் சமுதாய மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இந்த சமுதாய மக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை இல்லை என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. அதுவே நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளும் எதிரொலித்து இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. மேலும் எடப்பாடி தலைமையிலான அரசு வன்னியர் சமுதாய மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய நிகழ்வு மற்ற சமூக மக்களிடையே அதிமுக விற்கு உள்ள செல்வாக்கை குறைத்து இருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருக்கும் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு இது துரோகமிழைக்கும் செயல் என்று தென் தமிழகம் முழுவதும் பரவலாக பேச்சு எழுந்தது. இந்த குறிப்பிட்ட சமுதாய வாக்குகளை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பெறத் தவறி இருக்கிறது.மேலும் டிஎன்டி மக்களுக்கான இட ஒதிக்கீடு மற்றும் மதுரை ஏர்போர்ட்க்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க பல வருடங்களாக போராடினார்கள் இவை அதிமுகவால் புறக்கணிக்கப்பட்டது  இதனால்  இன் மக்கள் அதிமுகவை முழுவதும் புறக்கணித்து உள்ளார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது.

இந்த அதிருப்தி தேர்தல் முடிந்த பிறகும் தொடர்கிறது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலிலும் சரியான முடிவை அதிமுக தலைமையால் எடுக்கமுடியவில்லை. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகிய ஆவது கட்சியில் இருக்கும் மற்ற நிர்வாகிகளுக்கு விருப்பமில்லை என்ற சூழலே நிலவுகிறது.

அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் " புகழேந்தி" சில கருத்துக்களை தெரிவித்தார். அவர், ஆஇஅதிமுக எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கு தகுதியும் திறமையும் இருப்பதாக தெரிவித்தார். இம்மாதிரியான சில வெளிப்படையான பேச்சுக்களின் மூலம் அதிமுக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்களும் பத்திரிக்கையாளர்களும் கருதுகிறார்கள். மேலும் ஆஇஅதிமுக வை ஒன்றிணைக்க ஒருவரால் மட்டும்தான் முடியும் என்ற எண்ணமும் எழுந்திருக்கிறது. திருமதி சசிகலா மற்றும் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து, திருமதி சசிகலா பொதுச்செயலாளராக மாறினால் இந்த பிரச்சனைகளுக்கு சுமூகமான முடிவு எட்டப்படும் என கட்சியின் நெருக்கமான வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இந்நிகழ்வு நடக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை எதிர்காலம்தான் கணித்துச் சொல்ல வேண்டும்..