நவோதயா பள்ளிகளில் சேர்க்கை தொடக்கம்!!

21 July 2021


இந்தியா முழுவதிலும் உள்ள நவோதயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க இருப்பதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 


நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் 6-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள 24,17,009 பேருக்கு தேர்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 11,182 மையங்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.