பள்ளிப்பட்டு ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில் நில சொத்துக்கள் மீட்க நடவடிக்கை !

20 July 2021

பள்ளிப்பட்டு ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில் நில சொத்துக்கள் மீட்க நடவடிக்கை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
-----------------------

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பள்ளிப்பட்டு வரதராஜ பெருமாள் கோவிலில் ஆய்வு செய்தனர். 
-----------------------
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு பேரூராட்சியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது.இந்த கோவில் சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில் ஆகும்.கோயிலுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் 50 கோடிக்கும் மேல் ஏராளமாக இருந்தன.இந்த சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் பல கோடி சொத்துக்கள் காணவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பள்ளிப்பட்டு சமூக ஆர்வலர்கள் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நடைபெற்று வந்தது.இதனையடுத்து நீதிமன்றத்தின் மேலான உத்தரவுப்படி 19.07.2021 அன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் தக்கார் மற்றும் ஆய்வாளர் நிர்மலா அவர்கள் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் கதிர்வேலு அவர்களும் பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி மற்றும் கோவில் ஆய்வாளர் உஷா ஆகியோர் கொண்ட குழுவினர் கோவில் நிலங்களை ஆய்வு செய்தனர்.கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.அங்கே பொதுமக்கள் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.கோயில் நிலங்களை பொதுமக்கள் முன்னிலையில் மிகச்சரியாக அளக்க வேண்டும் என்றும்  வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான பள்ளிப்பட்டின் பல்வேறு பகுதியில் நிறைய கடைகள் தனியாரால்  ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிடியில் சிக்கி உள்ளது என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.இதற்கு அதிகாரிகள் கோயிலுக்கு முன்புறம் மற்றும் சுற்றி உள்ள கடைகள் மற்றும் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் நிச்சயமாக மீட்கப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்து நீதிமன்றத்தின் வாயிலாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு உறுதி அளித்தனர். 
கால தாமதம் ஏற்படாவண்ணம் அனைத்து கோயில் நிலங்களையும் மீட்க வேண்டும் என்று மான்புமிகு தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்களுக்கும் பள்ளிப்பட்டு பேரூராட்சி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.நல்லது நடக்கும் என்று காத்திருக்கின்றனர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்.

நிருபர் : 
K.S.திலீப்