தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

19 January 2023

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... 

உளுந்தூர்பேட்டை,  ஜன-19 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழ்நாடு மக்களுக்கு எதிராகவும் செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வட்டாரத் தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் முனைவர் .எஸ்.சீனிவாசன் கண்டன உரையாற்றினார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் நாகலிங்கம், ரவிச்சந்திரன், வட்டாரத் தலைவர் ராமசாமி, வட்டாரத் தலைவர் ஜோதிவேல், இளைஞர் காங்கிரஸ் மோகன்தாஸ், விவசாயத்துறை பஞ்சநாதன், ரங்கநாதன், சிவநாதன், கலியன், அன்சரபி, வட்டாரத் தலைவர் ஷேக் ஜவாத், எஸ்சி.துறை மாவட்டத் தலைவர் பெரியசாமி, பழனிவேல், ரவி, சேகர், சுத்ஜின், அப்துல்லா, சுல்தான், முகமது அலி, தினகரன், டைட்டில் ராஜ், ராஜசேகர், அரிச்சந்திரன், சேவா தல மாவட்ட தலைவர் மீடியா இ.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், ஆளுநருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்...

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் / சப்எடிட்டர்