இலஞ்சி கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 33. 82 ஏக்கர் சொத்துக்கள் ஒப்படைக்கப்பட்டன.

11 May 2021



தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம் இலஞ்சி திருவிலஞ்சிகுமாரர் கேவிலின் துணைக் கோவிலான இலஞ்சி குலசேகரநாதசுவாமி திருக்கோவிலுடன் இணைந்த பிரமநாயகம் செட்டியர் கட்டளைக்கு 1936, 1937 ஆண்டுகளில் சொத்துக்கள் எழுதி வைக்கப்பட்டன. இச்சொத்துக்களை கட்டளையின் முன்னாள் நிர்வாகி திருநெல்வேலி காமாட்சி நகரில் வசித்து வரும் சுப்பையா செட்டியார் மகன் பிரம்மநாயகம் செட்டியார் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்திற்கு 33. 82 ஏக்கர் நிலத்தை ஒப்படைப்பு செய்ய இசைவு தெரிவித்து கடந்த ஆண்டு கடிதம் எழுதியிருந்தார்.


இதனை இந்துசமய அறநிலையத்துறையும் ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து இம்மாதம் 7ம் தேதி இந்துசமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் பிரம்மநாயகம் செட்டியார் 33. 82 ஏக்கர் புஞ்சை சொத்துக்களை சுவாதீன ஒப்படைப்பு செய்தார்.

இதனையடுத்து தென்காசி மாவட்ட திருக்கோவி; உதவி ஆணையர் அருணாசலம், தக்கார் எஞ்னநாராயணன், இலஞ்சி குமாரர் கோவில் நிர்வாக அலுவலர் சுசீலாராணி, கோவில் ஆய்வாளர் லதா, இலஞ்சி கிராமநிர்வாக அலுவலர் பிரபாகரன், வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம உதவியாளர் ஜமால், நில சர்வேயர் சமி ஆமீனா, கோவில் பணியாளர்கள், குற்றாலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பொன்னுச்சாமி ஆகியோர் 33. 82 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து சரிபார்த்தனர்..

இதுகுறித்த அறிவிப்பு பலகையும் நிலத்தில் நேற்று வைக்கப்பட்டது.