30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்..

19 October 2022

30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 
30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி முகாம் மாவட்டத் துணைத் தலைவர் தங்கராசு தலைமையில் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்ராம் வரவேற்புரையாற்றினார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் துவக்கவுரையாற்றினார், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழலை புரிந்து கொள்ளுதல் குறித்து கருத்தாளர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் பாலகுருநாதன், திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார்கள், நிகழ்ச்சியின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஒருங்கிணைப்புக்குழு மாவட்டத் துணைச் செயலாளர் அய்யனார், ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர் அந்தோணிசாமி, சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் பாத்திமா, சின்னசேலம் ஒன்றிய செயலாளர் சரவணன், கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் ராஜசேகர், உளுந்தூர்பேட்டை வட்டாரத் தலைவர் ராமகிருஷ்ணன், திருநாவலூர் வட்டாரத் தலைவர் சீனிவாசன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர் செல்வமுருகன், திருநாவலூர் ஒன்றிய செயலாளர் குமரவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்த வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமில் சுமார் 120க்கும் மேற்பட்ட அரசு பள்ளியின் அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் அறிவியலில்
ஆர்வமுள்ள ஆசிரியர்களும் திரளாக கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு தமிழ்நாடு அறிவியல் இயக்க கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்  கருணாகரன் ஏற்பாடு செய்தார், மாவட்ட பொருளாளர் ஜாகிர் உசேன் நன்றி கூறினார்... 

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர்/ சப்எடிட்டர்