விமானத்தில் கடத்தி வரப்பட்ட 65லட்சம் மதிப்புள்ள 1.34 கிலோ கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்

15 September 2021

துபாயில் இருந்து சென்னைக்கு  விமானத்தில் கடத்தி வரப்பட்ட 65லட்சம் மதிப்புள்ள 1.34 கிலோ கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் தங்கம் கடத்தப்பட்டுவருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவான DRI அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்தநிலையில் இன்று அதிகாலை DRI அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது துபாயில் இருந்து வந்த விமான பயணிகளை தீவிர சோதனை செய்தனர்.

அப்போது அதில் வந்த 28 வயதுடைய பெண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து அந்தப் பெண் பயணியை நிறுத்தி தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது உடலுக்குள் மற்றும் உள்ளாடைகளில் 1.34 கிலோகிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு 65 லட்சம் ஆகும்.

இதையடுத்து DRI அதிகாரிகள் தங்கத்தையும்,பெண் பயணியையும் சென்னை விமானநிலைய  சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பெண் பயணியிடம் விசாரணை மேற்கொண்டுவருக்கின்றனர்.