தற்கொலைகளை தடுக்க வாழ்வோம் வாழ்விப்போம் என்ற தலைப்பில் ஒன்றிணைவு நிகழ்ச்சியை நடத்தி தற்கொலை தடுப்பு உறுதிமொழி எடுத்த 116 அரசு செவிலியர்கள்

26 September 2022

தற்கொலைகளை தடுக்க வாழ்வோம் வாழ்விப்போம் என்ற தலைப்பில் ஒன்றிணைவு நிகழ்ச்சியை நடத்தி தற்கொலை தடுப்பு உறுதிமொழி எடுத்த 116 அரசு செவிலியர்கள்

2004-2007 மதுரை மருத்துவக் கல்லூரி அரசு ராஜாஜி மருத்துவமனையில் பயிற்சி பெற்ற 116 செவிலியர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக தற்போது பணியாற்றி வருகின்றனர். தற்கொலை தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தற்கொலைகளை தடுக்கும் விதமாக உறுதிமொழி ஏற்க வாழ்வோம் வாழ்விப்போம் என்ற ஒன்றிணைவு நிகழ்ச்சி மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தற்கொலைகளை தடுக்க செவிலியர்கள் ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி தற்கொலை செய்யும் எண்ணம் உடையவர்களை கண்டறிந்து கவுன்சிலிங் கொடுக்க உறுதிமொழி ஏற்றனர். தமிழகத்தில் முதல்முறையாக மருத்துவத்துறையில் பணியாற்றும் செவிலியர்கள் இவ்வாறு தற்கொலைகளை தடுக்கும் விதமாக உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.

கொற்றவை செய்திகளுக்காக 
இரா. வெங்கடேசன் சப்எடிட்டர்