தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரிப்பு

25 January 2022

தமிழக அரசின் மதுபான கடையான டாஸ்மாக் (TASMAC) வருவாய் 11 சதவீதம் அதிகரித்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மது விற்பனையை அரசே நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 5,198 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தமிழக அரசுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. சாதாரண நாட்களில் தினமும் ரூ.70 கோடி அளவில் வருவாயும், பண்டிகை நாட்களில் பலநூறு கோடி ரூபாய் அளவில் வருவாய் கிடைத்து வருகிறது.தமிழகத்தில் 2022 புத்தாண்டில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்னையானது. இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.:

அதன்படி, தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 21,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. முன்னதாக, 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 19,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.