பிரிட்டனில் திருட்டு போன டாம் க்ளூஸின் 1000 பவுண்ட் மதிப்புள்ள உடமைகள்

28 August 2021

ஹாலிவுட் சினிமா நடிகர் டாம் க்ரூஸ் பிரிட்டன் நாட்டில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது உடமைகள் அங்கு களவாடப்பட்டுள்ளன. ஆயிரம் பவுண்ட்ஸ் மதிப்புள்ள உடமைகள் களவாடப்பட்டுள்ளன. அவரது பாதுகாவலரின் BMW X7 காரையும் திருடர்கள் திருடி சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் அங்குள்ள பர்மிங்காம் பகுதியில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கார் மீட்கப்பட்டு இருந்தாலும் அதில் இருந்த உடமைகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளன. 

MISSION IMPOSSIBLE 7 படபிடிப்புக்காக அவர் அங்கு நடித்து வருகிறார்.