ஆஸ்திரேலிய பழங்குடிகளின் பண்பாடுகள் - சுருக்கமான தகவல்கள்..!

ஆஸ்திரேலிய பழங்குடிகளின் பண்பாடுகள் - சுருக்கமான தகவல்கள்..!


ஆஸ்திரேலிய பழங்குடிகள், தங்களைச் சுற்றியுள்ள வரண்ட பாலைவன பிரதேசத்தையும் பொருட்படுத்தாமல், வேடுவர்களாகவும், நாடோடிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் 20000 ஆண்டுகட்கு முன்பு ஆசியாவிலிருந்து குடியேறினவர்கள் எனக் கூறப்படுகிறது. ஐரோப்பியரின் காலனி ஆதிக்கம் இங்கு தொடங்கி, அவர்களின் நாகரிகம் அங்கு தழைக்க ஆரம்பித்தபோதிலும், இப்பழங்குடிகள் ஐரோப்பிய நாகரிகத்தை விரும்பாமல், பாலைவனங்களின் மத்திக்கே சென்று, மிகக்கடினமான முறையில் தங்கள் வாழ்நாட்களைக் கழிக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் 50000 ஆகும். இவர்கள் ஒரு இடத்தில் நிலைக்காமல் தங்கள் உணவைத் தேடி திரிந்துக் கொண்டே இருப்பர். இவர்கள் பிராணி கனை மரக்கத்தி, வில்லெறிக்கொண்டு தாக்கியும், தினை, வாரு போன்ற சாதாரண தானியங்களை அரைத்து, நெருப்பிலிட்டு ரொட்டியாக்கி அவற்றை
உண்டும் காலம் கழிக்கின்றனர். 


இவர்கள் தங்களை குளிர்காற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள மலை அடிவாரங்களிலும், வெளி குடிசைகளிலும் அவ்வப்போது தங்கிக் கொள்ளுகின்றனர். அதிக குளிரான போதிலும் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் ஆடை அணிவதில்லை. கங்காருவின் தோலை குழந்தைகளைப் பாதுகாக்க பயன்படுத்துகின்றனர்.


ஆஸ்திரேலிய பழங்குடிகளின் உருவம் தென் இந்திய பழங்குடிகளின் தோற்றத்தை ஒந்திருப்பதால், தென் இந்தியப் பழங்குடிகள் ஆஸ்திரேலியர் இனத்தைச் சேர்ந்தவர்களெனக் கூறுகின்றனர். இவர்கள் நல்ல உயரமும், திடகாத்திரமான உடலும், எடுப்பான புருவங்களும், பாந்த தட்டையான மூக்கும், தடித்த உதடும், கரிய நிறமுள்ள சுருண்ட கேசமும், ரோமம் அடர்ந்த உடலும் கொண்டவர்கள். 


இவர்களின் கருவிகள் வில்லெறி, ஈட்டி, தோண்டும் கழி, உணவு பாத்திரம், சில தோல்கள் ஆகும். இத்துடன் கல், பீங்கான், கண்ணாடி முதலியவற்றில் கத்தி, பிளேட் முதலியவற்றைச் செய்கின்றனர். இப்பழங்குடிகளின் புனிதமானதும், இரகசியமானதுமான சொத்து ஐருங்கா எனப்படுவது. இதில்தான் இவர்கள் நடத்தும் உபநயன (Initiation) சடங்கின் மர்மம் அடங்கியுள்ளது. ஜுருங்கா மாத்திலும் கல்லிலும் செய்யப்பட்டிருக்கும். இவை முட்டை வடிவமான பொருட்கள். இவற்றின்மேல் பல வட்டமான கோடுகள் கீரப்பட்டிருக்கும். இக்கோடுகனில்தான் அப்பழம் குடிகளின் சரித்திரமே அடங்கியிருக்கிறது. 


இப்பழங்குடிகளின் கட்டுப்பாடும் திறமையும் இந்த ஜுருங்காவில்தான் அடங்கியுள்ளது. இவை மிக மறை வான இடங்களில் அதி ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். அவ்விடங்கள் வயதிலும் அறிவிலும் முதிர்ந்த சான்றோர்களுக்குதான் தெரியும், மரத்தில் செய்த ஒருங்காவிற்கு ஆங்கிலத்தில் "புல்சோரர்” எனவும் காளையின் கர்ஜிப்பு என தமிழிலும் பெயராகும். இது இருபக்கமும் ஒழுங்காக செதுக்கப்பட்ட முட்டை வடிவம் கொண்ட ஒரு மாக்கட்டை. இவற்றின் ஒரு முனையிலுள்ள துவாரத்தில், நார் அல்லது உரோமம் கொண்டு பின்னப்பட்ட கயிற்றை கட்டிச் சுழற்றுவர். அப்போது அது தன்னைத் தானே வேகமாக சுழற்றிக்கொள்வதோடு, ஒருவித இரைச்சலை ஏற்படுத்தும். இந்த சப்தமே அவர்களின் தேவதைகளிடமிருந்து வரும் ஒலியெனக் கருதுகின்றனர். 


ஆண்களுக்கு உபநயன சடங்கு செய்யும் காலத்தில் ஜுரூங்காவை உபயோகிப்பர். பெண்களும், உபநயன சடங்கு செய்தும் கொள்ளாத ஆண்களும் இந்த சடங்குகளின் அருகிலேயே அனுமதிக்கப்படமாட்டார்கள். அதை மீதி வருபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இச்சடங்கை நடத்தும் முதியோர்கள், மிகக் கடுமையான முறைகளைக் கைக்கொள்வர். இப்பழங்குடி மக்களில் மிகத்திடகாத்திர சாரம் படைத்தவர்கள் தங்கள் இரத்தத்தை அப்பையன்களின் மீது ஊற்றுவதன் மூலம் எதையும் தாங்கும் இதயத்தை அச்சிறுவர்களுக்கு அளிக்கின்றனர். 


இச்சடங்கின் மூலம் அச்சிறுவன் பெரியவர்களின் அந்தஸ்தை அடைகிறான். 'ஜுருங்கா' எழுப்பும் பயங்கர இறைச்சலின் நடுவில் அவ்வாலிபன்  உலகத்தின்  ஆக்கம், தன் இனத்தின் தொடக்கம், மதம், வாழ்க்கை முறை, முதலியவற்றை அறிந்து கொள்ளுகிறான். பீதி உண்டாக்கும் ஒலியினூடே வலி தரும் விதத்தில் முன் பல்லைத் தட்டி எடுத்துவிடுதலும், உடலில் கற்கத்திகளைக் கொண்டு கீறி உண்டாக்கும் வடுக்களும், அவன் அவ்வினத்தைச் சேர்ந்தவன் என்பதை மனதில் பதியவைப்பதோடு, தான் தன் இனத்திற்கு செய்யவேண்டிய கடமைகளை நினைவூட்டுகிறது. 


இவர்களின் வல்லெறி அல்லது வளைத்தடி இரண்டு வகைப்படும். பெரிய சண்டைகளிலும், போர்களிலும் உடயோசிக்கும் பெரிய வளைத்தடி திரும்பி வராத வகையையும், சிறிய பிராணிகளை வேட்டையாட உதவும் சிறய வளைத்தடி திரும்பிவரும் வகையையும் சேர்ந்தது. தென் இந்தியாலிலுள்ள மரவர் இதேபோலுள்ள திரும்பிவரும் வல்லெறியை உபயோகிப்பதில் கைதேர்ந்தவர்கள். ஆஸ்திரேலிய பழங்குடிகள் போர்களில் உபயோகிக்கும் வல்லெறிகளில் ஒருவகை தனித்தன்மை கொண்டுள்ளது. இது தூண்டில் முள்போல வளைவைக் கொண்டுள்ளதால், வீசும்போது எதிரியை சிக்கவைத்து விடும். 


ஆஸ்திரேலிய பழங்குடிகள் மிக வேகமாக ஈட்டி வீசுவதில் திறமைமிக்கவர்கள். சாதாரணமாக ஈட்டி எறிபவன் ஈட்டியை அதன் நடுவில் கையால் பிடித்து எரிவான். இதனால் ஈட்டி எட்டிய தூரம் வரையில் தான் பாயும். அதோடு அதன் குறியும் தவற நேரிடும். ஆனால் அவ் ஈட்டியை ஈட்டி எறியும் கருவியில் பதித்து எறிவதால், ஈட்டி எட்டும் தூரம் அதிகரிப்பதோடு, குறியும் தவராமல் செல்லுகிறது. ஈட்டி குறி தவராமல் செல்ல, ஈட்டி எறியும் கருவியின் மத்தியில் இருக்கும் குழைவு பயன்படுகிறது. ஈட்டி எறியும் கருவியின் உதவியால், ஈட்டியை மத்தியில் பிடிக்காமல் பின்பக்கத்தில் ஈட்டி எறியும் கருவியோடு சேர்த்து பிடித்து, ஓங்கும் போது, ஈட்டி மட்டும் வெளிப்படும். ஆஸ்திரேலிய பழங்குடிகளின் இச்செயல் இவர்களின் திறமையை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இவ்வித ஈட்டி எறியும் கருவிகளை தொல்பொருள் வல்லுநர்கள் முதன்முதலில் புதைப்பொருட் ஆராய்ச்சியில் கண்டெடுத்தபோது, அவற்றை எதற்கு உபயோகித்தனர் என்பதை கண்டறிய இயலவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய பழங்குடிகள் இன்றளவும் இவற்றை உபயோகிப்பதிலிருந்து, அவற்றின் உபயோகம் புலனாகிறது. தற்காலத்தில் வாழும் பழங்குடிகளிடத்தில் கற்கால மனிதனின் பழக்கவழக்கங்களில் சில இன்றளவும் தொடர்ந்து நிலைத்து வருகிறது என்பதற்கு இது ஓர் சான்றாகும். 


புதைப்பொருள் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சில பொருட்கள், அக்கால மனிதர்கள் எதற்காக, எவ்வாறு அவைகளை பயன்படுத்தினர் என்பதை அறிய, தற்கால பழங்குடிகளிடத்திலுள்ள அதே அமைப்புள்ள பொருட்கள், எஞ்சி, உபயோகத்தில் இருப்பதால் நமக்கு அதன் உபயோகம் தெரிகிறது. இவ்வித சந்தர்ப்பங்களில் தொல்பொருள் வல்லுநர்களுக்கு துணையாக நிற்பது மானிடவியலாகும். 


கற்கால மனிதன் உபயோகித்த கற்கருவிகளும் ஆயுதங்களும் 
உண்மையிலேயே அவன் செய்தவையா என்னும் ஐயம் அனேகரிடத்தில் சமீப காலம் வரை இருந்து வந்தது. ஆனால் இன்று ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பழங்குடிகள் கற்கால மனிதனைப்போல் கற்கருவிகளைச் செய்து உபயோகித்து வருவதால், அப்பழங்குடிகளிடம் தற்காலத்திலும் கற்கால பண்பாடு எஞ்சியிருப்பதை காணலாம். இன்று ஆஸ்திரேலிய பழங்குடிகள் கற்கருவிகளை கற்களில் செய்வதோடு, பீங்கான், கண்ணாடி போன்ற நவீன பொருட்களிலும் செய்கின்றனர்.