திருச்செந்தூர் கோயில் தர்மகர்த்தா வாக ஊர்க்காடு ஜமீன்தார்

•திருச்செந்தூர் கோயில் தர்மகர்த்தா வாக ஊர்க்காடு ஜமீன்தார் இருந்ததைக் கூறும் சாசனம்•

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தர்மகர்த்தாவாக, ஊர்க்காடு  ஜமீன்தாரான கோட்டிலிங்கச் சேதுராயரவர்கள் குமாரர் சிவன் சேதுராயரவர்கள்  இருக்கும் காலத்தில், மேற்படி கோவிலின் வருமானங்களை விருத்தி செய்யும் பொருட்டு, சேரன்மாதேவி ஊரில், அநேக நஞ்சை நிலங்கள் வாங்கப்பட்டும், நெல்சேர் முதலான கட்டிடங்களும் செய்விக்கப்பட்டுமிருக்கின்றன. என்று இந்த கல்வெட்டு கூறுகிறது.