மோட்டார் காரும் சேத்தூரும்!!!

மோட்டார் காரும் சேத்தூரும்!!!

சரியாக 1904 ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்திற்கு முதல் மோட்டார் கார் வந்தது. கார் ஓனர் புகழ் பெற்ற சிவில் கான்ராக்டர் நம்பெருமாள் செட்டி. அதன் பின்பு அடிசன் கம்பேனி டைரக்டர் ஒருவர் ,பின் தெற்கு ரயில்வே  தலைமை மேலாளர் ஒருவர். 

1910 அல்லது 1912 வாக்கில் கொங்கு மண்டலத்தில் சில மோட்டார் கார்கள் உலவி உள்ளன. மோட்டார் கார் அசோசியேசன் உட்பட.

அதற்கும் முன் வேலூர் கிருத்துவ  மருத்துவமனை நிறுவனர் இடோ ,ப்யூஜா இன்ஞின் பொருத்திய அதிக சப்தம் எழுப்பும் மோட்டார் கார் வைத்துள்ளார்.

இந்த கார்களுக்கு பெட்ரோல் அமெரிக்காவில் இருந்து கப்பலில் ஐந்து கேலன் இரும்பு கண்டெயினர்களில் வந்துள்ளது சென்னை வரை. பின் அவரவர் ஊருக்கு ரெயிலில் வந்துள்ளது. 

1915 க்கு பிறகு தான் சென்னை கடற்கரையில் ஷெல் கம்பேனி மொத்தமாக பெட்ரோல் இறக்குமதி செய்து பங்குகளில் விற்பனை செய்துள்ளது.

1904க்கும் 1908க்கும் இடைபட்ட காலத்தில் தென் தமிழகத்தில் (கேரளா உட்பட) முதல் மோட்டார் கார் ஓனர் சேத்தூர் ஜமீன்தார் மகாராஜா சேவுகபாண்டியத்தேவர் அவர்கள்.

பெட்ரோல் கேன்களில் இராஜபாளையம் வரை ரயிலில் SPT(Sevuga Pandia Tevar) என்று முத்திரையிட்ட தனி பார்சல் வேகனில் வந்திருக்கின்றன.

திருவிழா கூட்டம் போல மக்கள் வேடிக்கை பார்க்க கூடி விடுவார்களாம் இராஜபாளையம் வீதிகளில். பின்னால் இராஜபாளைத்தில் மோட்டார் பேருந்து தொழில்கள் தோன்ற சேத்தூர் ஜமீன்தாரின் மோட்டார் கார் தான் விதை.

கிருத்துவ மிஸினரிகளுடன் மிகுந்த நட்பு கொண்டிருந்த ஜமீன்தார் ,ஒரு முறை அவரது ஆங்கிலேய தோழி  சிவகாசி அருகில் சாட்சியாபுரத்தில் தனது குழுவினருடன் மத பிரசங்கம் செய்ய சென்றிருந்த வேளை திரும்பவும் ஶ்ரீவில்லிபுத்தூர் வர தனது மோட்டார் காரை  அனுப்பி வைத்துள்ளார் . குழுவினரில் ஒருவர் இந்த பயணத்தை குறித்து குறிப்பு எழுதியுள்ளார்.

"சேத்தூர் ஜமீன்தார் தனது மோட்டார் காரை அனுப்பி எங்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்து விட்டார்,இந்த ஆடம்பரத்திற்கு மிஸ ஸ் மார்ட்டினிக்கு ஜமீன்தாருடன் இருந்த நல்உறவு தான் காரணம் என்றால் அது மிகை யாகாது. மொத்தம் பதின்மூன்று மைல் தொலைவை கடக்க கரடு முரடான சாலையில் மூன்று மணி நேரம் பிடித்தது ......’

ஆதாரம்: Christian Missionary Review ,volume 61 . Published in the year 1910. 


Courtesy: சேத்தூர் ராஜா Dorai M A Raj . அவர்கள்.