முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தேவற் பிறந்ததினம்:

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தேவற் பிறந்ததினம்:

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1218இல் மறைந்தார். அதன்பின் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டிய நாட்டு ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.

இவன் தனது முன்னோர் சோழர்களுக்கு அடங்கித் திறை செலுத்தித் தம் வாழ்நாளைக் கழித்து வந்த இழிநிலையை துடைத்தார் இம்மாவீரர். மேலும் தனது இளம்வயதில் மூன்றாம் குலோத்துங்கன் படையெடுத்து வந்து மதுரையில் உள்ள அரண்மனை மண்டபங்களைத் தரை மட்டமாக்கியதை எல்லாம் நேரில் கண்டிருந்ததால் சோழ நாட்டை வென்று பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்று எண்ணியிருந்தார். இந்நிலையில் மூன்றாம் குலோத்துங்கன் இறந்ததும். அவரின் மகன் மூன்றாம் இராசராசன் சோழ நாட்டு அரியணை ஏறி ஆட்சி செய்துவந்தார்.

பழிவாங்கும் நோக்குடன் காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, மூன்றாம் இராசராசனைப் போரில் வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டார். சோழ நாட்டின் தலைநகர்களாக இருந்த தஞ்சையையும், உறையூரையும் தீக்கு இரையாக்கினான்; அங்குள்ள மணி மண்டபங்களையும், மாட மாளிகைகளையும் இடித்துத் தரை மட்டமாக்கி,போரில் தோல்வியுற்ற மூன்றாம் இராசராசன் தனது சுற்றத்தாருடன் தலைநகரை விட்டு வெளியேறி ஒரு மறைவிடத்தில் தங்கி வாழுமாறு செய்தார்.

மாறவர்மன் சுந்தரபாண்டியன் தேவர்  சோழர்களின் இரண்டாம் தலைநகராகிய பழையாறை சென்று அங்குள்ள அரண்மனையில் வீராபிடேகம் செய்து கொண்டு, "சொனாடு கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவர்" எனும் விருதுபெயரை சூடிக்கொண்டார். பின்னர்ப் பாண்டிய நாடு திரும்பிச் செல்லும் வழியில், பொன்னமராவதியில் உள்ள தனது அரண்மனையில் தங்கி, நாட்டை இழந்த மூன்றாம் இராசராசனை அழைத்துவரச் செய்து அவருக்குச் சோழ நாட்டைத் திரும்ப அளித்து அவனைத் தனக்குத் திறை செலுத்தி ஆட்சி செய்து வருமாறு பணித்தார்.
அதுமுதல் "சோனாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியதேவர்" எனும் அடைமொழியை சூடினார்.

இத்தகைய சிறப்புபெற்ற மாறவர்மன்  சுந்தரபாண்டியன் பிறந்த புரட்டாசி அவிட்டம் நாள் இன்று என்பதனை நினைவுகூர்வோம்.