சாதாரண குடிமகனே மண் சட்டியில் தன் பேரைப் பொறித்துக் கொள்ளுமளவுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்கிறான் !?

கீழடி, புள்ளிமான் கோம்பை, கொடுமணல் மதுரையைச் சுற்றிய எண்பரங் குன்றம், பொற்பனைக் கோட்டை என நூற்றுக்கணக்கான தமிழிக் கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகள் எல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னிருந்தே தமிழர்கள் எழுதப் படிக்கத் தெரிந்த முன்னோடி அறிவார்ந்த கலாச்சாரத்தை ஏற்படுத்தியவர்கள் என்பதையே.. 

சாதாரண குடிமகனே மண் சட்டியில் தன் பேரைப் பொறித்துக் கொள்ளுமளவுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்கிறான். 

நூற்றுக்கணக்கான புலவர்கள் ஏராளமாக எழுதி வைத்து, அதில் மிகச் சிறந்தவற்றை மட்டும் வடிகட்டித் தேர்ந்தெடுத்துத் தொகுத்து சங்கப் பாடல்களாக நிலைக்க வைத்திருக்கிறார்கள். 

அவ்வாறெனில் அந்த எழுத்துருக்களைச் சொல்லிக் கொடுத்தது யார்...? 

இன்ன மாதிரியான எழுத்துருக்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற முறைப்படுத்துதலோ அதற்கான பள்ளிக்கூடங்களோ, ஆசிரியர்களோ,  இருந்திருக்க வேண்டுமல்லவா .. 

பள்ளிக்கூடம் இல்லாமல் பாடம் ஏது. 

அவ்வாறான பள்ளிக் கூடங்களில் ஒன்றே "கிண்ணிமங்கலம்” 

படத்தில் புகளூர்க் கல்வெட்டு

”மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
கடுங்கோன் மகன் ளங்
கடுங்கோன் ளங்கோ ஆக அறுத்த கல்”

செய்தி: 

யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்னும் துறவிக்குச் சேரமன்னர் செல்லிரும்பொறை மகனான பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ இளவரசர் ஆவதை முன்னிட்டு வழங்கப்பட்ட கொடை

கல்வெட்டு தகவல் உதவி தமிழ் இணையக் கல்விக்கழகம்.