இலங்கை ஆண்ட தமிழ் மறவர்கள்!

தமிழர் ஆதிக்கம்

யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் அரசியல் ஆதிக்கம் பெற்றிருந்த நாகர், லம்பகர்ணர் என்போருடைய ஆட்சிகள் முறையே கி.பி. 303 கி.பி, 556. என்னும் ஆண்டுகளோடு முடிவடைந்தது. இதன் பின்னர் குடியேறிய படைவீரர்களுடைய ஆதிக்கம் வளர்ச்சியடையத் தொடங்கியது. மறவர்கள் வட கிழக்கிலும், தென்கிழக்கிலும்பாணர்கள் (வாணர்குடி மறவர்)தென்மேற்குப் பகுதிகளிலும் ஆட்சிப் பீடங்கள் அமைத்தனர்;. அவை வடமறாச்சி (வடமறவர் ஆட்சி, தென்மறாட்சி (தென்மறவர் ஆட்சி) என்னும் பெயர்களைப் பெற்றன. பாணர்கள் அமைத்த ஆட்சிப்பீடம் யாழ்ப்பாணம் என்று அழைக்கப்பட்டது. 
 களப்பிரர் என்னும் கள்ளரினச்சாதியர் கிபி. 5ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டை ஆண்டனர்.”

அரசகுடும்பங்களுக்குள் ஏற்பட்ட கலகங்கள் காரணமாக அநேக அரசர்களும், பிரமுகர்களும் கொல்லப்பட்டனர் இது காரணமாக யாழ்ப்பாணத்திற் சிங்களவருடைய ஆதிக்கம் நிலைகுலைந்தது. இதைக்கண்ட மறவர், பாணர் முதலிய தமிழ்ப்பிரமுகர்கள் சிங்கள அரசுக்கு மாறான வரிகொடா இயக்கத்தையும்,நிலச் சுவீகரிப்பு இயக்கத்தையும் தொடங்கிப் பூரணவெற்றி பெற்றனர். இவ்வெற்றி சிங்களவரை யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறச் செய்தது. சகல வாய்ப்புகளும் நிரம்பிய இந்த நேரத்தில் தமிழ்ப்பிரமுகர்கள் ஒன்றுகூடி யாழ்ப்பாணத்தில் ஓர் தமிழரசைத் தாபிக்க முடிவுசெய்து தங்கள் தலைவனாகிய பாண்டி மழவனை மதுரைக்குப்போய் ஒரு இராசகுமாரனை அழைத்து வருமாறு அனுப்பினர்.

தமிழரசு
"""""""""""""
பாண்டியமழவன் மதுரைக்குப் போய், இராமபிரானாற் சேதுவைக் காவல் செய்யுமாறு நியமிக்கப்பட்ட இருவரின் வம்சத்தோன்றலும்,( சேதுபதி அரசர்களின் வம்சத்தொடர்பு உடையவனும்,) பாண்டிய மன்னனின் சேனைத் தலைவனுமாக விளங்கிய சிங்கையாரியனை (கூழங்கையனை) அழைத்துவந்து முடிசூட்டி யாழ்ப்பாணத்துக்கு அரசனாக்கினான். "ஆரியன்" என்னும்அச்சொல் ஓர் உபசாரப் பட்டமேயன்றி பிராமணத் தொடர்பைக் குறிக்காதென்பது...

 "ஆரியவேந்தனென்றணிமணிப்
 பட்டமும் நல்கி” 

எனும் செகராச சேகரமாலைப்பாட்டால் விளங்கும். அரசர்கள் தங்கள் உயர்பதவிக்கேற்ப உயர்குலப் பட்டங்களைத் தங்கள் பெயரோடு சேர்த்து எழுதுதல் மரபு. கலிங்க அரசர்கள் தங்களைக் "கறகா" குலத்தவரென்றும் சேர அரசர்கள் தங்களை அக்கினி குலத்தவரென்றும், பாண்டிய அரசர்கள் தங்களைச் சந்திர குலத்தவர் என்றும் கூறுவது அக்கால வழக்கமாக இருந்தது. கலப்பு விவாகம் பிராமணருக்கும், மறவருக்கும் இடையில் நடக்கும் வழக்கம் இல்லை. நடந்தாலும் கலப்பு விவாகத்தாற் பிறந்த பிள்ளைகளுக்கு அரசுரிமை கிடையாது. ஆரியன் என்ற சொல்லில் மயங்கி டாக்டர் லிவறா, கீயுறோஸ்  காசிச்செட்டி முதலியோர் சிங்கையாரியனுக்குப் பிராமணத் தொடர்பு கற்பித்தனர்.

ஆரியச் சக்கரவர்த்திகள் செந்தமிழ் பேசுந் தமிழரே அன்றி தெலுங்கு பேசும் கலிங்க நாட்டவர் அல்லர். அரசகுமாரர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் போது பாண்டி மழவன் அவர்களைத் தேடி ஆயிரம் மைலுக்கப்பாலுள்ள கலிங்க நாட்டிற்குப் போகவேண்டிய அவசியமே இல்லை. இராசநாயக முதலியார் சிங்கையாரியனை கலிங்கதேசத்தவனாக்கினது சிறிதும் பொருந்தாது. ஆரியச் சக்கரவர்த்திகள் எல்லாரும் தமிழ்மொழி பேசினரேயன்றித் தெலுங்கு முதலிய பிறமொழிகளைப் பேசினார் என்பதற்கு ஒரு வகையான ஆதாரமும் கிடையாது. அவர்கள் தமிழமொழி பேசினர் என்பது "கூயுறொஸ்’ என்பவர் கூற்றினால் அறியலாம்.  யாழ்ப்பாணத் தமிழரசர்கள் இராமேஸ்வரத்தை ஆண்ட சேதுபதி அரசர்களுக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது, அவர்களது நாணயங்களின் சேது என்னுஞ் சொல் பொறிக்கப்பட்டிருப்பதாரும் அறியலாம்.

தமிழரசும் குடியேற்றக்காரரும்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தமிழரசு கி.பி. 795இல் யாழ்ப்பாணத்தில் தொடங்கியபோது குடியேற்றக்காரருக்கு நல்ல 
காலம் பிறந்தது. தமிழரசின் கீழ் உயர்ந்த உத்தியோகம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர்களுக்கு இரண்டு குறைகள் அவ்வுத்தியோகங்களைப் பெறத்தடையாயிருந்தன. ஆவை படைகளை விட்டு விலகி மறைமுகமாகக் குடியேறினது, உயர்குடிப்பிறப்பின்னை என்னும் இரண்டுமாகும். அவற்றை நீக்கி மதிப்புடன் அரசியலில் உயர்ந்த பதவிகளில் அமரவேண்டும் என்னும் பேரவாவினால் தூண்டப்பெற்ற மழவர், பாணர் முதலியோர் பல வழியிலும் அக்குறைகளை நீக்க முயற்சி செய்தனர். இதே சமத்தில் இடைச்சாதிகளைச் சேர்ந்த பலர் தங்கள் சாதிப் பட்டங்களை மறைத்து வேளாளருக்குரிய பிள்ளை, முதலி என்னும் பட்டங்களைத் தமது பெயரோடு வைத்து வேளாளராக முயன்றனர் என்பதைப் பின்வரும் நாட்டுப் பாடலால் அறியலாம்.

"கள்ளர் மறவர் கணத்ததோர் அகம்படியர்
மெல்ல மெல்ல வெள்ளாள ராயினர்”

இந்தச் சூழ்நிலையிற் படைவீரர்களாகிய மழவர், பாணர் முதலியோர் தாம் தொண்டை நாட்டிலிருந்து விசேட அழைப்பின் பேரில் வரவழைக்கப்பட்ட உயர்குடி வேளாளர் என்று வெறும்வாய்ப்பேச்சாளும்நூல்களே வையாபாடல், கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை என்பன.

            நன்றி - யாழ்பாணக்குடியேற்றம் 
           ஆசிரியர்;        டீ.யு.முத்துக்குமாரஸ்வாமி பிள்ளை அவர்கள்