பெரியபுராணம் கூறும் சண்டேசர்:

பெரியபுராணம் கூறும் சண்டேசர்:

சோழர்கள் முடிசூடும் மரபுடைய பழமையான ஐந்து ஊர்களில் சேய்ஞலூரும் ஒன்று என்கிறார் சேக்கிழார். பழம்பெருமையுடைய இவ்வூரில் காசிப கோத்திரத்தின் தலைமை குடியில் நல்வினை, தீவினை என இரண்டும் ஒருங்கே கொண்ட "எச்சதத்தன்" என்பவன் வாழ்ந்து வந்தான். இவரது மனைவியோ பழுத்த சிவப்பழம்
இவர்களுக்கு மகனாய் பிறந்தவரே வியாசருமர் எனும் சண்டேசர். தன் ஐந்து வயதிற்குள்ளாகவே சிவாகமம் மறைகள் சிறப்பாய் அவருள்ளேயே தங்கின. ஏழுவயதில் உபநயனம் எனும் சடங்கினை முடித்தார். தம் பெற்றோர் விருப்பப்படி மறைஓதும் செயலை செய்துவந்தார். ஆசிரியர் மறைகள் கற்றுத்தரும் முன்னே அவைகளை உள்ளத்தில் பெற்றிருந்தார். ஆடல்வல்லானின் அன்பே தன்னுள் அழியாதிருப்பதை உணர்ந்தார் அப்பாலகன். 

சண்டேசரின் பாலக தோற்றத்தை பெரும்பாலான கோவில்களில் கண்டதில்லை. முகம் கொஞ்சம் Matured ஆக, உடல்ரீதியாய் பலம் பொருந்தியவராய் சிற்பத்தை வடித்திருப்பர். இச்சிற்பமோ ஏழுவயது குழந்தை எவ்வாறு இருப்பானோ அவனது உடல்மொழி எவ்வாறு இருக்குமோ அதை அப்படியே காட்சிபடுத்தியுள்ளனர்.

Thanks :
பாலாஜி கிருஷ்ணமூர்த்தி
Sasi Dharan