படையுடன் வந்த அரசனின் மனதை மாற்றி போரில் தான் கைப்பற்றிய செல்வங்கள் அனைத்தையும் கோவிலுக்கு நிவந்தமாக தரும் நிகழ்வு !


பல்லவர் சாளுக்கியர் போர்கள் தொடர்ச்சியாக  நடைபெற்ற வண்ணமிருந்தன, இப்போர்கள் பற்றி கொண்ட    

செப்பேடுகளும் கல்வெட்டுகளும்  விவரிக்கின்றன. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள இரண்டாம் விக்ககிரமாதித்யனின்

பல்லவர்கள் கல்வெட்டு ஓர் தனித்துவமான தகவலை தருகிறது.

இரண்டாம் நந்திவர்மனின் காலத்தில் கிபி 734ல் காஞ்சிபுரம் நகரத்தின் மீது படையெடுத்து வருகிறான் விக்கிரமாதித்யன் நரசிம்ம வர்மர் வாதாபியை கொண்டது போல் விக்ககிரமாதித்யன் காஞ்சி நகரத்தை கைபற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் போரிட்டு வெற்றி பெறுகிறான் விக்ககிரமாதித்யன்.

படை பரிவாரங்கள் உடன் காஞ்சி நகரில் வெற்றி உலாவரும் போது    

இராஜசிம்மேஸ்வரம் (காஞ்சிபுரம் கைலாசநாதர்)  கோவிலை கண்டு மகிழ்ந்து விக்ககிரமாதித்யன். போரில் தான் கைப்பற்றிய செல்வங்கள் அனைத்தையும் ராஜசிம்மேஸ்வரங்     

கோவிலுக்கு நிவந்தமாக தருகிறார் விக்ககிரமாதித்யன் இந் நிகழ்வுகளை காஞ்சி கைலாய நாதர் ஆலயத்தில் ஓர் வெற்றி தூணில் கன்னட கல்வெட்டாக பதிந்து சென்றுள்ளார் இரண்டாம் விக்ரமாதித்தன்.

இன்றும் மண்டப தூணில் உள்ள  கல்வெட்டு உள்ளன விக்ரமாதித்தன் செய்த தர்மம்தை  தாங்கி நிற்கிறது

"ஸ்வஸ்தி ஸ்ரீ விக்ககிரமாதித்ய சத்தியாச்ரய ஸ்ரீ

பிருத்திவி வல்லப மஹாராஜா

ராஜ பரமெஸ்வர பட்டாரகர் கச்சியும் கொண்டு

ராஜசிம்மேஸ்வரங் தந்மங் கண்டு மகிழ்து தெவரகெ

பிட்டார் இந்து பிட்ட பட்டாரர் தர்மமத திதியும் இ அக்ஷ்ரங்களு மாத்

அழிவார் இஊரா கடிகைய் மஹா ஜந்மாந்த கொந்தார் லொகக்கெ சந்தர்ப்பர்

நிர் வாத்ய கொந்தார் ஸ்ரீமத் அநிவாரித புண்ய வல்லபெ லிகிதம் இதம் வல்லபபதுர்ஜெயா அதிக்காரித்திம்      ”

தமிழ் ஆக்கம்

"ஸ்ரீ விக்ககிரமாதித்ய சத்தியாச்ரய ஸ்ரீ பிருத்திவி வல்லப மஹாராஜா கச்சியும் கொண்டு ராஜசிம்மேஸ்வரத்தை  கண்டு மகிழ்ந்து இறைவனுக்கு தானம் செய்தார் இந்த வார்த்தைகளை அழிப்பவர்கள் காஞ்சியில் உள்ள கல்வி நிலையத்தை அழித்த பாவத்தை பெறுவார்கள் இந்த தர்மத்தை காப்பவர்களுக்கு புண்ணியம் கிடைக்கட்டும் இந்த எழுத்துகளை எழுதிய அதிகாரிகள்  ஸ்ரீமத் அநிவாரித புண்யவல்லபன் மற்றும் வல்லபபதுர்ஜெயா” என்ற கல்வெட்டு செய்தி இதில் உள்ளது.

கன்னட கல்வெட்டு ஆக இருந்தாலும் இதில் தமிழ் வார்த்தைகளை ஸ்ரீமத் அநிவாரித புண்யவல்லபனும் வல்லபபதுர்ஜெயனும் பயணப்படுத்தி உள்ளனர்

கச்சியும் கொண்டு


ராஜசிம்மேஸ்வரங் கண்டு


மகிழ்து-மகிழ்ந்து


அழிவார்.


அதிக்காரித்திம்- அதிகாரிகள் 


இந்நிகழ்வுகள் பின்னர் காஞ்சி நகரத்திலிருந்து சிற்பிகளை பட்டடகல்லிற்கு அழைத்து சென்று ராஜசிம்மேஸ்வரம் கோவில் போன்றே விருப்பாக்ஷா கோவில் ஒன்றை கட்டிக் கொள்கிறார் இன்று விருப்பாக்ஷா கோவில் பல்லவர் கலை பாணியில் அமைந்திருக்கும்.

படையுடன் வந்த அரசனின் மனதை மாற்றி கச்சியை காப்பாற்றியது ராஜசிம்மேஸ்வரத்தில் வீற்றிருக்கும் ராஜசிம்மேஸ்வரர் தான். கைலாச நாதர் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தால் இக்கல்வெட்டை காணும்போது விக்ககிரமாதித்யனின் பெருந்தன்மை நம் கண் முன்னே தோன்றும்.