மருதுபாண்டியர்கள் கல்வெட்டு

மருதுபாண்டியர்கள் கல்வெட்டு 

சகாத்தம்1722 ரௌத்ரிவருடம், தைமாதம்13ம்தேதி , பெரியஉடையனத்தேவரின் காரியத்திற்கு கற்த்தரான மருதுபாண்டியர்கள் கேரளசிங்கவளநாட்டு
வீரபாண்டியநல்லூர் சிங்கம்புணரியில்  சேவுகப்பெருமாள் கோவில் சன்னதியில்
சேவுகன்அம்பலகாரனுக்கு சந்திரனும் சூரியனும் உள்ளவரை தர்மம் நடப்பிச்சு கொள்ள ஒருமடத்தைப் பராமரிப்பதற்காக அளித்த நஞ்சை/புஞ்சை நிலக்கொடை  பற்றிய கல்வெட்டு சேவுக பெருமாள் அய்யனார் கோவிலின் முன்புறமாக  உள்ளது.

முதலாம் ராசராசன் காலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த பகுதி கேரள சிங்க வளநாடு என்றழைக்கப்பட்டுள்ளது என்பது இந்த கல்வெட்டின் மூலம் உறுதியாகிறது.

ஆங்கில வருடம் 27 Jan 1800 ஆக இருக்கலாம். அந்த பக்கம் போனா பார்த்துட்டு வாங்க மக்களே...

கல்வெட்டு :
உ சுவஸ்த்தி ஸ்ரீ சாலிவா
கன சகாத்தம் 1722 இ[தன்]
மெல்ச் செல்லானின்ற ரவுத்
திரி ௵ தையி ௴ 13 ௳ மகாரா
சமானிய ராச ஸ்ரீ அரசு நிலையி
ட்ட விசைய ரகுனாதப் பெரிய உ
டையாத் தெவரவர்கள் காரி
யத்துக்கு கற்த்தரான ராசமானியர
ரச ஸ்ரீ மருதுபாண்டியரவர்கள்
கெரழ சிங்கை வளர் நாட்டு வெள்
குலராம நிலையான வீரபாண்டி
யநல்லூர் சிங்கம்புணரி செவு
கப் பெருமாள் சுவாமியார் சன்
னிதானத்தில் வெள்ளைச் சொ
க்க அம்பலகாறன் குமாரன் செவுக
னம்பலகாறன் தடாகம் மடவாலை
யமும் தற்மத்துக்கு உபைய வினியொக
ம் அமுதுபடிக்கு சறுவ மானிய
மாக விட்டுக் குடுத்த நஞ்சை ஒரு
மா னிலத்துக்கும் புஞ்சை அளவு
க்கு .. கம்னாலுக்கும் வகை குச்சு
க் கட்டி வயலில் நாலாங்கரைக்
கு வடக்கு மெள்மடங் கரை [ராம]
சாமி வயக்கல் ள ௧௰௨௯ ள இ
துவும் இதினிடை வி வடக்கு
௸ வயக்கல் பெருமாள் வயக்
ல் ....................... ஆக தடி ௨௱ நில
ம் பு இதுவும் மெல்ப்படியான ஊற
ணி தடாக(த்து)க்கு இடை வி தெற்கு ம
ணல்ப் புஞ்சைக்கு கள அளவுக்கு
ம் ளம் னாலு இந்த நஞ்சையும் பு
ஞ்சையும் தற்மத்துக்கு சறுவ மானி
யம் பண்ணி குடுத்த படியினாலெ க
ல்லுங் காவேரியும் புல்லும்
பூமியும் சந்திராதித்தி யாளுள்
ளவரைக்கும் தற்மம் நடப்
பிவிச்சு கொள்ளவு

சேவுகபெருமாள்அய்யனார்கோவில் பதினெட்டாம்நூற்றாண்டு  விஜயரகுநாதபெரியஉடையனத்தேவருக்கு காரியகற்தாக விளங்கிய "மருதுபாண்டியர்" கல்வெட்டு  சிங்கம்புணரி சிவகங்கை மாவட்டம்